3 கிலோ ஹெராயின் உட்பட $480,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் சிக்கின

3 கிலோ ஹெராயின் உட்பட $480,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் சிக்கின

1 mins read
896f3182-62ff-4d47-80ad-3cca85556469
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய $480,000. படங்கள்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 2

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மூன்று கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஹெராயினைக் கைப்பற்றினர்.

சிங்கப்பூரர்களான இரண்டு மாதர்களும் ஓர் ஆடவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய $480,000.

அதிகாரிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பல இடங்களில் நடத்திய சோதனைகளில் $47,879 பணமும் பிடிபட்டது.

கைதான மூவரும் விசாரிக்கப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்