விடுதிவாசி ஒருவர் உட்பட சிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19

விடுதிவாசி ஒருவர் உட்பட சிங்கப்பூரில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19

1 mins read
5f82e7f7-bbb2-45a9-9a18-8b21817edd9b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 11 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று (பிப்ரவரி 28) அறிவிக்கப்பட்டது. அவர்களில் ஊழியர் தங்குவிடுதிவாசி ஒருவர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சிங்கப்பூரின் உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் புதிதாக தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை 59,936 பேருக்கு கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில், 59,801 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒருவர் உட்பட 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக பராமரிப்பு நிலையங்களில் 65 பேர் தேறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்