கொவிட்-19 தடுப்பூசிக்கு மூத்தோரிடையே வரவேற்பு

கொவிட்-19 தொற்­றில் இருந்து பாது­காத்­துக்­கொள்ள தடுப்­பூசி போட்டுக்­கொள்­வது நல்­லது என்று மூத்த சிங்­கப்­பூ­ரர்­கள் கரு­து­கின்­ற­னர்.

“தடுப்­பூசி போட்டுக்கொள்­வ­தால் பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­படும் என கூறப்­படும் புரளி எனது காதுக்கு விழுந்­தது.

“இருந்­தும் நான் அதைப்­பொருட்­ப­டுத்­தா­மல் முழு­நம்­பிக்­கை­யு­டன் பிப்­ர­வரி 3ஆம் தேதி தெக் கீ சமூக நிலை­யத்­தில் தனது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்­டேன்,” என்றார் மூத்த சிங்­கப்­பூ­ர­ரான ஓய்­வு­பெற்ற திரு பாலன் கிரு­‌ஷ்­ணன்.

ஓராண்டு கடி­ன­மான காலகட்­டத்­தைக் கடந்து கடை­சி­யில் தொற்­று­நோய்க்கு எதி­ரான பாது­காப்பை வலுப்­ப­டுத்­தும் வகை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டதை அடுத்த கட்ட நகர்­வா­கக் கரு­து­வ­தாக திரு பாலன்­கி­ரு­‌ஷ்­ணன் கூறி­னார்.

“தடுப்­பூசி நிலை­யத்­திற்­குள் நுழைந்த ஐந்து நிமி­டங்­க­ளுக்­குள் எனக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது. ஊசி போட்­ட­தற்­குப் பின் பக்­க­விளை­வு­கள் ஏற்­ப­டா­ததை உறுதி செய்­யும் வகை­யில் அங்­கி­ருந்த ஓய்­வ­றை­யில் அரை மணி நேரம் ஓய்­வெ­டுத்­தேன்,” என்று தான் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனு­ப­வத்தை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சு­டன் பகிர்ந்­து­கொண்­டார் திரு பாலன்.

பிப்­ர­வரி 18ஆம் தேதிக்­குள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 250,000 பேரில் திரு பால­னும் ஒரு­வர். அவர்­களில் 110,000 பேர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்­ட­னர்.

அங் மோ கியோ, தஞ்­சோங் பகார் ஆகிய பகு­தி­களில் முன்­னோட்ட தடுப்­பூசி போடும் பணி வெற்­றி­ய­டைந்­த­தை­ய­டுத்து, சிங்­கப்­பூர் முழு­தும் 70 வய­து­டை­ய­வர்­களும் அதற்கு மேற்­பட்­ட­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளு­மாறு பிப்­ர­வரி 22ஆம் தேதி அறி­விக்­கப்­பட்­டது.

முன்­னோட்­ட­மாக பிப்­ர­வரி 18ஆம் தேதி நடந்த தடுப்­பூசி போடும் திட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 5,000 மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

அங் மோ கியோ பகு­தி­யில் வசித்­து­வ­ரும் ஆங் பெங் கியாப், 73, தான் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனு­ப­வத்­தைக் கூறும்­போது, “ஊசி போட்­டுக்­கொண்­ட­தற்­குப் பின் இலே­சான காய்ச்­சல் ஏற்­ப­ட­லாம் என்று கேள்­விப்­பட்­டேன். அதைத் தவிர்ப்­ப­தற்­காக நான் நிறைய தண்­ணீர் குடித்­து­விட்டு வீட்­டில் தங்கி ஓய்­வெ­டுத்­தேன்.

“நான் கேள்­விப்­பட்­ட­து­போல் காய்ச்­சல் ஏதும் எனக்கு வர­வில்லை. எனவே, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­காக யாரும் அச்­சப்­படத் தேவை­யில்லை. தொற்­றில் இருந்து நம்­மைப் பாது­காக்க தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதே சிறந்த வழி,” என்று கூறி­யுள்­ளார்.

இவர் தனது முதல் தடுப்­பூ­சியை ஜன­வரி 27ஆம் தேதி­யி­லும் இரண்­டா­வது தடுப்­பூ­சியை பிப்­ர­வரி 17ஆம் தேதி­யி­லும் போட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!