கை சுத்திகரிப்பானை விநியோகிக்கும் இயந்திரங்கள் செயல்படத் தொடங்கின

கை சுத்திகரிப்பானை விநியோகிக்கும் இயந்திரங்கள் செயல்படத் தொடங்கின

1 mins read
68b55303-fb05-48cf-a28a-8c652116586f
கைசுத்திகரிப்பானை விநியோகிக்கும் இயந்திரங்கள் பெரும்பாலும் 24 மணி நேரமும் செயல்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கை சுத்திகரிப்பானை விநியோகிக்கும் இயந்திரங்கள் இன்று (ஏப்ரல் 12) முதல் செயல்படத் தொடங்கின. ஒவ்வொரு குடும்பமும் 500 மில்லி லிட்டர் அளவிலான கை சுத்திகரிப்பானை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள தெமாசெக் அறநிறுவனத்தின் 'தெமாசெக் ஷாப்ஹவுஸ்' அல்லது தீவெங்கும் உள்ள 108 சமூக மன்றங்களிலும் நிலையங்களிலும் அமைந்துள்ள தானியக்க இயந்திரங்களில் இந்த மாதம் 25ஆம் தேதி வரை கை சுத்திகரிப்பானை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

கை சுத்திகரிப்பானைப் பெற்றுக்கொள்ள குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த போத்தல்களையும் எஸ்பி குழுமத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் கட்டணச் சீட்டை எடுத்துச்செல்ல வேண்டும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கிருமித்தொற்று