உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக தொடர்ந்து நீடிக்கும் சிங்கப்பூர் கடவுச்சீட்டு

உலகத் தரவரிசையில் அதிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு தொடர்ந்து இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது ஜப்பானிய கடவுச்சீட்டு.

ஜப்பானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட விசா இல்லாமல் பயணிக்க முடியும். இது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 191 ஆக இருந்தது.

192 நாடுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய சிங்கப்பூரர் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்ததைவிட மேலும் இரு நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
தென்கொரியாவும் ஜெர்மனியும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அவற்றின் கடவுச்சீட்டுகளுடன் 191 நாடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ‘ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ்’ இந்த தரவரிசையை ஆண்டு முழுவதும் அவ்வப்போது வெளியிடுகிறது.

இது தற்காலிக கொவிட் -19 பயணக் கட்டுப்பாடுகளுக்கு அங்கம் வகிக்கவில்லை என்றாலும் நாடுகள் தங்கள் எல்லைகளை அனைத்துலகப் பயணிகளுக்குத் திறக்கத் தொடங்கும்போது, ​​தொற்றுநோய்க்குப் பிந்தைய பயண சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

2019 ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டன. எனினும் கடந்த ஆண்டு மீண்டும் ஜப்பான் முதல் இடத்தைப் பிடித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!