அதிகமான சிங்கப்பூர் பெண்கள் வெளிநாட்டவரை மணந்தனர்

அதிகமான சிங்கப்பூர் பெண்கள் வெளிநாட்டவரை மணந்தனர்

1 mins read
9be2a69a-f679-49db-8d89-04d795b2a424
அதி­க­மான சிங்­கப்­பூர் பெண்­கள் வெளி­நாட்டு ஆட­வரை மணம் புரிந்­துள்­ள­னர். படம்: பெக்சல்ஸ் -

அதி­க­மான சிங்­கப்­பூர் பெண்­கள் வெளி­நாட்டு ஆட­வரை மணம் புரிந்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. 2019ஆம் ஆண்­டில் 1,727 பெண்­கள் அவ்­வாறு செய்­த­னர். இது 2000ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் 75 விழுக்­காடு அதி­கம். அப்­போது 989 பெண்­கள் மட்­டுமே வெளி­நாட்டு வாழ்க்­கைத்­து­ணை­யைப் பெற்­ற­னர். ஆண்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய ஒட்­டு­மொத்த சிங்­கப்­பூ­ரர்­கள் கடந்த 20 ஆண்­டு­களில் வெளி­நாட்­ட­வரை மணந்­தது 75% கூடி­ய­தாக தர­வு­கள் தெரி­விக்­கின்­றன. 2019ஆம் ஆண்டு 4,426 சிங்­கப்­பூர் ஆண்­கள் வெளி­நாட்­டுப் பெண்­களை திரு­ம­ணம் செய்­த­னர்.

இந்த எண்­ணிக்கை 2000ஆம் ஆண்டு 3,834 ஆக இருந்­தது. சிங்­கப்­பூர் அல்­லா­தோ­ரும் நிரந்­த­ர­வாசி அல்­லா­தோ­ரும் வெளி­நாட்­ட­வர் என்று தரவு குறிப்­பிட்­டி­ருந்­தது. மேலும் 2019ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் பெண்­கள் வெளி­நாட்டு ஆட­வரை மணந்த விகி­தம் ஒட்­டு­மொத்த குடி­மக்­கள்-வெளி­நாட்­டவர் திரு­மண எண்­ணிக்­கை­யில் 28%. 2000ஆம் ஆண்­டில் இது 21% இருந்­தது.

மேலும் 2019ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரரை மணந்­த­வர்­களில் 60% ஆசிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். அந்த ஆண்­டில் அதி­க­மான சிங்­கப்­பூர் பெண்­கள் வேலைக்­கா­க­வும் படிப்­புக்­கா­க­வும் வெளி­நா­டு­ சென்­ற­தும் அதே கார­ணங்­க­ளுக்­காக வெளி­நாட்டு ஆட­வர்­கள் அதி­க­மாக சிங்­கப்­பூர் வந்­த­தும் ஒரு­வ­ரோடு ஒரு­வர் சந்­திக்­கும் வாய்ப்­பு­களை அதி­க­மா­க்கியதாக சமூ­க­வி­யல் நிபு­ணர் டான் எர்ன் செர் தெரி­வித்துள்­ளார்.

குறிப்புச் சொற்கள்