சிறுநீரகம் செயலிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறுநீரகம் செயலிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
e0b7cb7f-b19b-4c86-ad05-b47ac803e46d
தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தில் திறக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம். படம்: தேசிய சிறுநீரக அறநிறுவனம் -

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்­டும் சிறு­நீ­ர­கம் செயல்­ப­டா­மல் போய்­விடும் நோயா­ளிக­ளின் எண் ணிக்கை கணிச­மாக அதி­க­ரித்­து உள்­ளது. நீரி­ழி­வு­நோய் கூடி வரு­வ­தும் வயது மூப்­பும் இதற்­குக் கார­ணம் என தெரியவந்துள்ளது.

கடந்த 2017ல் 1,999 பேருக்கு முற்­றி­விட்ட கடை­சிக்­கட்ட சிறு­நீரகக் கோளாறு இருந்­தது.

இதைக் கணக்­கிட்­டுப் பார்க்­கை­யில், மக்­கள் தொகை­யில் மில்­லி­யன் பேரில் 504.1 பேருக்கு இந்த நோய் இருப்­ப­தாக தெரி­கிறது. இந்த எண்­ணிக்கை, 2009ல் 1,275 பேரா­க­வும் மில்லியன் பேருக்கு 341.5 பேர் என்ற அள­வி­லும் இருந்­தது.

சிங்­கப்­பூ­ரில் ஏறத்­தாழ 5,000 நோயா­ளி­க­ளுக்கு ரத்த சுத்­த­கரிப்பு சிகிச்சை அளிக்­கும் ஆகப்­பெ­ரிய நிறு­வ­ன­மா­கச் செயல்­பட்டு வரு­கின்ற தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரியான டிம் ஓய், "சிங்­கப்­பூரில் சிறு­நீ­ர­கம் செயல் இழக்­கும் நோயா­ளி­கள் எண்­ணிக்கை குறை­ வ­தா­கத் தெரியவில்லை. அது அதி­க­மாவது மிக­வும் கவலையாக இருக்­கிறது," என்­றார்.

சிங்­கப்­பூர் சிறு­நீ­ரக பதி­வ­கத்­தின் ஆகப்­பு­திய ஆண்டு அறிக்கை சென்ற மாதம் வெளி­யி­டப்­பட்­டது.

அது 2018ஆம் ஆண்டுக்கு உரி­யது. அதில் இடம்­பெற்­றுள்ள தக­வல்­களில் பெரும்­பாலா­னாவை 2017ஆம் ஆண்­டில் இடம்­பெற்­றவை. இந்­தப் பதி­வக விவ­ரங்­களை உட­னுக்­கு­டன் புதுப்­பித்­தால் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் இந்­தப் பிரச்­சினை பற்றி மேலும் பல­வற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்­ள­லாம் என்று திரு டிம் யோசனை கூறி­னார்.

சிறு­சீ­ர­கம் செயல் இழப்பு மலாய்க்­கா­ரர்­களிடையே அதி­க­மாக இருக்­கிறது. அவர்களில் இத்­த­கைய நோயா­ளிகள் எண்­ணிக்கை மில்­லி­யன் பேரில் 676.9 பேராக இருந்­தது. இந்­தி­யர்­கள் (309.5), சீனர்­கள் (233) அடுத்­தடுத்த இடங்களில் உள்ளனர்.

புதிய ரத்த சுத்­தி­க­ரிப்பு நோயாளி­களில் ஐவ­ரில் நால்­வருக்கு வயது 50 முதல் 79 வரை இருந்­தது.

இருந்­தா­லும் 2009ல் 61.1 ஆக இருந்த ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்­சை­யைத் தொடங்­கும் நோயா­ளி­யின் சரா­சரி வயது 64.3 ஆகக் கூடி­ இருக்கிறது.

ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்சை பெற்று வந்த­வர்­களில் மர­ணம் அடைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 2014ல் 764 ஆக இருந்­தது. அது 2018ல் 914 ஆகக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்