தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் கடப்பிதழ் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும்

1 mins read
cc3fd16e-6bca-42e8-874f-e1dfb785c44d
சிங்கப்பூர் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) இப்போது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகிறது. இந்தக் காலம் 10 ஆண்டுகளாக ஆக்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) இப்போது ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகிறது. இந்தக் காலம் 10 ஆண்டுகளாக ஆக்கப்படுகிறது.

இவ்வாண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு விண்ணப்பிக்கும் 16 வயதுக்கு அதிக வயதுள்ள குடிமக்கள் அனைவருக்கும் 10 ஆண்டு கடப்பிதழ் வழங்கப்படும். கட்டணம் மாறாமல் $70 ஆகவே இருக்கும்.

இதன் மூலம் கடப்பிதழை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சிங்கப்பூரர்களுக்கு வசதி கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

16 வயதுக்கு குறைந்த குடிமக்களுக்கான கடப்பிதழ்தொடர்ந்து ஐந்தாண்டுகள் தான் செல்லுபடியாகும். சிறார்கள் வளர வளர அவர்களின் முக அம்சங்களும் தொடர்ந்து மாறுபாடும் என்பதே இதற்கான காரணம்.

சிங்கப்பூர் கடப்பிதழ் 2005 ஏப்ரல் வரை 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியதாக இருந்து வந்தது. ஆனால் மின்னணுச் சில்லுப் பதிக்கப்பட்ட கடப்பிதழ் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கடப்பிதழின் காலம் ஐந்தாண்டாகக் குறைக்கப்பட்டது.

இந்த நவீன முறைக்கு மாறி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. உலகம் முழுவதுமே குடிநுழைவு துறைகள் இந்தப் புதிய தொழில்நுட்பத்தையே பரவலாகப் பயன்படுத்துகின்றன என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.

ஆகையால் கடப்பிதழ் செல்லுபடியாகக் கூடிய காலம் 10 ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கியது.

குறிப்புச் சொற்கள்