மோசடியான தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் பயனீட்டாளர்களுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக 'ஸ்கேம்ஷீல்டு' என்ற செயலி கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டது. அதை தேசிய குற்றத் தடுப்பு மன்றமும் சிங்கப்பூர் போலிசும் நிர்வகித்து வருகின்றன.
அந்தச் செயலியை 119,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மோசடிகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக நம்பப்படும் 5,500க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை அந்தச் செயலி தடுத்துவிட்டது.
அச்செயலியைப் பயன்படுத்தி இதுவரை ஏறத்தாழ 722,000 குறுஞ்செய்திகள் பற்றிய புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

