பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 294 பேரை போலிஸ் விசாரித்து வருகிறது. மொத்தம் 534 மோசடி சம்பவங்கள் பற்றி விசாரிக்கப்படுகின்றன.
அந்த மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஏறத்தாழ $7 மில்லியன் இழந்துவிட்டனர். விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகப்பேர்வழிகளில் 193 பேர் ஆண்கள். 101 பேர் பெண்கள். அவர்களுக்கு வயது 16 முதல் 74 வரை என்று போலிஸ் அறிக்கையில் தெரிவித்தது.
ஏமாற்றியது, கள்ளத்தளமாக பணம் அனுப்பியது, உரிமம் இல்லாமல் பணப்பட்டுவாடா சேவைகளில் ஈடு பட்டது முதலான சட்டவிரோத காரியங்களில் சந்தேகப் பேர்வழிகள் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இணையக் காதல், இணைய வர்த்தகம், அரசாங்க அதிகாரிகள் போல், சீன அதிகாரிகள் போல் நடித்தது, போலியான முதலீடு, கேளிக்கை, சூதாட்டம், கடன் ஆகிய இணையத்தளங்கள் மூலம் அவர்கள் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.
வர்த்தக விகாரத் துறை அதிகாரிகளும் ஏழு தரை போலிஸ் பிரிவு அதிகாரிகளும் மே 22 ஆம் தேதி முதல் நேற்று வரை மேற்கொண்ட இரண்டு வார நடவடிக்கைகளில் சந்தேகப் பேர்வழிகள் சிக்கினர்.

