பார்டி லியானி புகார் நான்கு நாட்களில் விசாரிக்கப்பட்டது

பார்டி லியானி புகார் நான்கு நாட்களில் விசாரிக்கப்பட்டது

1 mins read
90a46825-d91a-42fa-9176-6bc6f2a732b9
-

முன்­னாள் பணிப்­பெண் பார்டி லியானி இரண்டு துணை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீது அளித்த புகா­ரின் தொடர்­பில் நான்கு நாட்­க­ளாக விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ரக­சி­ய­மாக நடத்­தப்­பட்ட நீதி­மன்ற விசா­ரணை, இம்­மா­தம் ஆற­தாம் தேதி­யி­லி­ருந்து ஒன்பதாம் தேதி வரை நடை­பெற்றது. 47 வயது திரு­வாட்டி லியானி, மெய்­நி­கர் வாயி­லாக சாட்­சி­ய­ளித்­தார்.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் திரு­வாட்டி லியானி இந்­தோ­னீ­சி­யா­விற்­குத் திரும்­பி­னார். அதற்கு நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு, தனது முன்­னாள் முத­லா­ளி­யி­டமிருந்து அவர் திரு­ட­வில்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டது.