கொவிட்-19 சூழலிலும் பிடிஓ வீட்டுத் திட்டங்கள் மும்முரம்

கொவிட்-19 சூழலிலும் பிடிஓ வீட்டுத் திட்டங்கள் மும்முரம்

1 mins read
6af4a383-40be-4059-a7af-cdf047de524e
படம்: சாவ்பாவ் -

இவ்வாண்டு மொத்தத்துக்கும் 19 பிடிஓ வீட்டுத் திட்டங்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் இது கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பு ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களைவிட அதிகம் என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது.

கிருமிப் பரவலால் கட்டுமானத் துறையில் இடையூறுகள் ஏற்பட்டபோதும், வீட்டுக் கட்டுமானம் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஒப்புநோக்க சென்ற 2018லும் 2019லும் ஆண்டுக்கு 17 வீட்டுத் திட்டங்கள் நிறைவடைந்தன.

கிருமிப் பரவல் சூழலில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை மொத்தம் 25 அரசாங்க வீட்டுத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அவற்றில் 11 திட்டங்கள் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாண்டு இதுவரை 14 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானம் முடிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்