மகனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த தந்தை

மகனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த தந்தை

1 mins read
7eef4d0d-456d-4f62-a154-73552dd36b0d
-

தனது மனை­வி­யை­யும் இரண்டு பிள்­ளை­க­ளை­யும் பல­முறை தாக்­கிய ஆட­வ­ருக்கு ஆறு மாதங்­கள் இரண்டு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. குற்­ற­வாளி, தன் மீதிருந்த தனி­ந­பர் பாது­காப்பு ஆணை­யை­யும் மீறியிருக்­கி­றார்.

அவர் ஒருமுறை பூட்டைக் கொண்டு தனது மகனின் முதுகில் பலமுறை அடித்திருக்கிறார். மகன் உயிரிழக்கும் வரை அவ்வாறு செய்வதை நிறுத்தப்போதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

வேண்­டு­மென்றே தனது குடும்­பத்­தா­ருக்­குக் காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தன் தொடர்­பில் சுமத்­தப்­பட்ட ஐந்து குற்­றச்­சாட்­டு­களை 54 வயது சிங்கப்­பூ­ர­ரான குற்­ற­வாளி ஒப்­புக்­கொ­ணட்ார். சிறைத் தண்­ட­னை­யு­டன் அவ­ருக்கு 1,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

தீர்ப்­ப­ளிக்­கும்­போது மேலும் ஒன்­பது குற்­றச்­சாட்­டு­கள் கருத்தில்­கொள்­ளப்­பட்­டன. குற்­ற­வா­ளி­யின் மக­ளுக்­குத் தற்­போது 17 வய­தா­வ­தால் சிறு­வர், இளம் வய­தி­னர் சட்­டத்­தின்­கீழ் அனை­வ­ரின் அடை­யா­ளத்தையும் வெளியிட அனுமதி இல்லை.