சாதகமான நிலையில் சிங்கப்பூர் வெள்ளி

சாதகமான நிலையில் சிங்கப்பூர் வெள்ளி

1 mins read
c67a6808-e9db-4412-8176-dec996bbccc7
-

தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் ஆண்டிற்­கான ஆக சிறந்த செயல்­தி­றன்­மிக்க நாண­யம் என்­பதை முடிவு செய்­யும் முயற்­சி­கள் தொடங்கி­விட்­டன. இதில் பல அம்­சங்­களும் சிங்­கப்­பூர் வெள்­ளிக்கு அனு­கூ­ல­மாக இருக்­கின்­றன.

அதற்­குள்­ளாக ஒரு முடி­வுக்கு வர முடி­யாது என்­றா­லும் அந்த உய­ரிய நிலையை எட்­டு­வ­தற்கு வலு­வான நிலை­யில் சிங்­கப்­பூர் வெள்ளி இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் சென்ற வாரம் எடுத்த முடிவு கார­ண­மாக சிங்­கப்­பூர் வெள்ளி ஆக அதிக செயல்­தி­றன்­மிக்க நாண­யம் என்ற அந்­தஸ்தைப் பெறு­வ­தற்கு வலு­வான போட்­டி­போ­டும் நிலை­யில் இருக்­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை வெற்­றி­க­ர­மான முறை­யில் சிங்­கப்­பூர் சமா­ளித்து இருப்­ப­தும் சிங்­கப்­பூர் வெள்ளி உய­ரிய இடத்­தைப் பெற மேலும் ஓர் அனு­கூ­ல­மாக இருக்­கும் வாய்ப்­பும் உள்ளது.

சிங்­கப்­பூர் வெள்ளி சென்ற நவம்­ப­ரில் இருந்து ஏறத்­தாழ 1.5% மதிப்பு கூடி இருக்­கிறது.

விலை­களை நிலைப்­ப­டுத்­து­வதற்­கான ஒரு கருவியாக அந்­நியச் செலா­வ­ணியை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் பயன்­ப­டுத்­து­கிறது.

அத­னு­டைய அடுத்த கூட்­டம் ஏப்­ர­லில் நடக்­கிறது. நாணய மதிப்பு குறையாமல் இருக்கும் வகையில் மீண்டும் நாண­யக் கொள்­கையை ஆணையம் அக்கூட்டத்தில் இறுக்­கும் பட்­சத்­தில் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய அனு­கூ­லங்­கள் மிக அதிக மாக இருக்­கும் என்று தெரி­கிறது.