பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்கிய கட்டுமான ஊழியருக்குச் சிறைத்தண்டனை

பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்கிய கட்டுமான ஊழியருக்குச் சிறைத்தண்டனை

2 mins read
c1bdbd4a-192e-4656-9437-506aa196ff88
-

சிரி­யா­வில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்த பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு நிதி­யா­த­ரவு அளித்த பங்­ளா­தேஷ் நாட்­ட­வ­ருக்கு ஈராண்­டு­களும் எட்டு மாதங்­களும் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அக­மது ஃபைசல், 27 (படம்), எனும் இந்த ஆட­வர், பயங்­க­ர­வாத (நிதி­யா­த­ரவை ஒடுக்­கு­தல்) சட்­டத்­தின்­கீழ் தன்­மீது சுமத்­தப்­பட்ட ஐந்து குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார். தண்­டனை விதிக்­கப்­ப­டு­முன் இவர்­மீ­தான மேலும் பத்­துக் குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன. இந்­தச் சட்­டத்­தின்­கீழ் ஒரு­வர் எதிர்­நோக்­கிய ஆக அதி­கக் குற்­றச்­சாட்­டு­கள் இவை­தான் என்று கூறப்­பட்­டது.

கட்­டு­மான ஊழி­ய­ராக இங்கு வேலை­செய்து வந்த அக­மது $900 முதல் $1,200 வரை மாத ஊதி­ய­மாக ஈட்டி வந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஃபேஸ்புக் வழி­யா­கப் புனி­தப் போர் பற்­றி­யும் சிரி­யா­வில் நடந்த உள்­நாட்­டுப் போர் குறித்­தும் அக­மது முதன்­மு­த­லில் அறிந்­தார். அத­னைத் தொடர்ந்து, சிரி­யா­வில் ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு, இஸ்­லா­மிய அரசை நிறுவ இவர் தொடக்­கத்­தில் ஆத­ரவு அளித்­தார்.

பல்­வேறு ஃபேஸ்புக் கணக்­கு­கள், தற்­கா­லிக மின்­னஞ்­சல் முக­வரி­க­ளைப் பயன்­ப­டுத்தி, புனி­தப்­போர் பற்றி அக­மது பதி­விட்­டார்.

சிரியா சென்று, அந்­நாட்டு அர­சைக் கவிழ்க்க ஐஎஸ் அமைப்­பிற்கு உத­வு­வது குறித்­தும் இவர் பரி­சீலித்­தார். ஆயினும், சிரியா செல்ல போதிய பணம் இல்­லா­த­தா­லும் தாய்­நாட்­டில் உள்ள குடும்­பத்­திற்கு ஆத­ரவு வழங்க வேண்டி இருந்­த­தா­லும் அந்த எண்­ணத்­தைக் கைவிட்­டார்.

பின்­னர், ஐஎஸ் அமைப்­பி­னர் அப்­பாவி மக்­க­ளைக் கொன்­ற­தற்கு முஸ்­லிம் கல்­வி­மான்­கள் கண்­டித்த காணொ­ளி­க­ளைக் கண்­ட­பி­றகு, அவ்­வ­மைப்­பின் செயல்­க­ளால் அக­மது ஏமாற்­ற­ம­டைந்­தார்.

அதன்­பின் சிரி­யா­வில் செயல்­பட்ட ஹயாத் தஹ்­ரீர் அல்­ ஷாம் (எச்­டி­எஸ்) எனும் இன்­னொரு பயங்­க­ர­வாத அமைப்பை இவர் ஆத­ரிக்­கத் தொடங்­கி­னார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இருந்­த­போ­தும், சிங்­கப்­பூ­ரில் ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்த அக­மது எண்­ணம் கொண்­டி­ருக்­க­வில்லை என்­றும் பிரச்­சி­னை­யி­ல் இ­ருந்து வில­கி­யிருக்கவும் இங்கு வேலை செய்­வ­தன்­மூ­லம் பங்­ளா­தே­ஷில் உள்ள தன் குடும்­பத்தைத் தொடர்ந்து ஆத­ரிக்கவும் விரும்­பினார் என்­றும் சொல்­லப்­பட்­டது.

கடந்த 2019 நடுப்­ப­கு­தி­யில் இருந்து, பங்­ளா­தேஷ் வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த மருத்­து­வர் ஒரு­வ­ரின் ஃபேஸ்புக் பக்­கத்தை இவர் பின்­தொ­டர்ந்­தார். அந்த மருத்­து­வர் சிரி­யா­வின் இட்­லிப்­பில் பணி­பு­ரிந்து வந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சிரிய அர­சாங்­கம் அகற்­றப்­பட வேண்­டும் என்று கூறி, அதற்­குப் போரா­டிய எச்­டி­எஸ் அமைப்­பிற்கு ஆத­ரவு தெரி­வித்து அம்­ம­ருத்­து­வர் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்டு வந்­தார். காய­முற்ற எச்­டி­எஸ் போரா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க நிதி­யு­தவி வழங்­கக் கோரி­யும் அவர் காணொ­ளி­களை வெளி­யிட்டு, கோரிக்கை விடுத்­தார்.

இத­னை­ய­டுத்து, எச்டிஎஸ் அமைப்­பிற்­குச் சென்­று­சே­ரும் என நம்பி, அக­மது கடந்த 2020 பிப்­ர­வரி-அக்­டோ­பர் காலகட்டத்தில் 15 முறை மொத்­தம் 891.98 வெள்­ளியை அனுப்­பி­வைத்­தார்.

கைது­செய்­யப்­பட்­ட­போது அக­ம­தி­டம் ஏழு கத்­தி­கள் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. ஆயி­னும், அவற்றை பங்­ளா­தே­ஷில் மட்­டுமே பயன்­ப­டுத்­த­ இருந்­த­தாக விசா­ரணை­யின்­போது இவர் சொன்­னார்.