400 பெண்களைத் தகாத முறையில் படமெடுத்த ஆடவருக்குச் சிறை

1 mins read
33f5734a-aa5f-4ad0-81bf-8197edca5cbb
குவோ சிஹோங்கிற்கு பத்து மாதங்கள், ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) ஆய்வுப் பிரிவில் பணிபுரிந்துகொண்டிருந்த சீன நாட்டவர், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைத்தொகுதியில் பெண் ஒருவரின் குட்டைப் பாவாடைக்குள் படமெடுத்தபோது கையும் களவுமாக மாட்டினார்.

அதையடுத்து, அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 400 பெண்களின் குட்டைப் பாவாடைக்குள் அவர் படமெடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது.

என்டியு, கடைத்தொகுதிகள், எம்ஆர்டி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் அப்படங்கள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றத்துக்காக குவோ சிஹோங்கிற்கு பத்து மாதங்கள், ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.