ஹஜ் யாத்திரை குறித்து கலந்தாலோசிக்க அமைச்சர் மசகோஸ் சவூதிக்குப் பயணம்

ஹஜ் யாத்திரை குறித்து கலந்தாலோசிக்க அமைச்சர் மசகோஸ் சவூதிக்குப் பயணம்

1 mins read
6d66ff80-f5f3-47d8-8405-86736416a470
-

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, நேற்று சனிக்கிழமை (மார்ச் 26) தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை ஒருவார பயணமாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

எதிர்வரும் ஹஜ் யாத்திரை தொடர்பிலான விவகாரங்கள் பற்றி சவூதி அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசிப்பார் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்தது.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ், அங்கு ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபீக் ஃபவ்ஸான் அல் ரபியாவை சந்திப்பார்.

பல்வேறு சவூதி அதிகாரிகளையும் சந்திக்கவுள்ள அவர், மதினாவிலும் சவூதி தலைநகர் ரியாத்திலும் சிங்கப்பூர் மாணவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார்.

திரு மசகோஸுடன் முயிஸ் தலைமை நிர்வாகியும் இதர மூத்த அதிகாரிகளும் சவூதி சென்றுள்ளனர்.