போதைப்பொருள்: சிராங்கூன் சாலை வட்டாரத்தில் 4 மூத்தோர் கைது

போதைப்பொருள்: சிராங்கூன் சாலை வட்டாரத்தில் 4 மூத்தோர் கைது

1 mins read
9c043e4e-9fd6-4f09-a436-0349f674570e
-

போதைப்­பொ­ருள் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின்­பே­ரில் நான்கு முதி­ய­வர்­கள் சிராங்­கூன் சாலை வட்­டா­ரத்­தில் கைது­செய்­யப்­பட்­ட­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) நேற்று (ஏப்­ரல் 24) தெரி­வித்­தது. கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 61 வய­துக்­கும் 67 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். இவர்­களில் ஒரு­வர் பெண்.

சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது சுமார் 735 கிராம் போதை­மிகு அபின், 254 கிராம் ஐஸ் ஆகி­யன பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. அவற்­றின் சந்தை மதிப்பு ஏறத்­தாழ $90,000 என்று சிஎன்பி கூறி­யது.

தொடக்­க­மாக, வெள்­ளிக்­கி­ழமை பிற்­ப­கல் சிராங்­கூன் சாலை வட்­டா­ரத்­தில் 61 வயது ஆட­வரை சிஎன்பி அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். அவ­ரி­ட­மி­ருந்து 245 கிராம் ஐஸ் போதைப்­பொ­ரு­ளை­யும் $3,400 ரொக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

தொடர் நட­வ­டிக்­கை­யில், 65 வயது பெண், 65 மற்­றும் 67 வய­துள்ள இரு ஆட­வர்­கள் ஆகி­யோர் சிராங்­கூன் சாலை­யில் கைது செய்­யப்­பட்­ட­னர். அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள்.

67 வயது ஆட­வ­ரி­ட­மி­ருந்து 521 கிராம் ஹெரா­யின், 3 கிராம் ஐஸ் ஆகிய போதைப்­பொ­ருள்­க­ளு­டன் $1,500 ரொக்­க­மும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

பின்­னர், 65 வயது ஆட­வ­ரும் பெண்­ணும் அந்த வட்­டா­ரத்­தில் உள்ள தனி­யார் குடி­யி­ருப்­புப் பேட்­டைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அங்கு 214 கிராம் ஹெரா­யி­னும் 6 கிராம் ஐஸும் 65 வயது ஆட­வ­ரி­ட­மி­ருந்து $12,000 ரொக்­கப் பண­மும் கைப்­பற்­றப்­பட்­டன.

பிடி­பட்ட அனை­வ­ரி­ட­மும் விசா ரணை தொட­ரு­கிறது.