தெம்பனிஸ் வீவக புளோக்குகளில் சமூகத் தோட்டங்கள்

தெம்பனிஸ் வீவக புளோக்குகளில் சமூகத் தோட்டங்கள்

1 mins read
d69445e3-9fd8-40ac-a37b-8ea751a75e57
'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் கூரை மேல் இருக்கும் தோட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெம்­ப­னி­சில் கூடு­தல் வீவக புளோக்­கு­க­ளில சமூ­கத் தோட்­டங்­களும் 'வெர்ட்­டிக்­கல் ஃபார்ம்ஸ்' எனப்­படும் அடுக்­குப் பண்­ணை­களும் இடம்­பெ­ற­லாம்.

இந்த வட்­டா­ரத்­தில் உண­வு தயா­ரிப்பதற்கான ஆற்றல் உள்ளிட்ட அம்சங்களை மேம்­ப­டுத்த முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரும் வேளை­யில் இவ்­வாறு அறி­விக்­கப்­பட்டுள்ளது.

இத்­த­கைய பண்­ணைக­ளில் தயாரிக்­கப்­படும் உணவை வர்த்­தக ரீதி­யா­க­வும் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்குக் குறைந்த விலையிலும் வழங்க வகை­செய்­யும் கட்­டமைப்பை உரு­வாக்­கு­வது குறித்து ஆலோ­சிக்­கப்­ப­ட­லாம் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர்   தெரிவித்­தார்.

"தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டாத பகு­தி­களில் இந்­தப் பண்­ணை­கள் அமைக்கப்படும். அத­னால் அவ்­வி­டங்­க­ளுக்­கான விலை குறை­வாக இருக்­கும். அதே வேளை­யில், உணவை விநி­யோ­கிக்­க­வேண்­டிய இடத்­தி­லேயே இவை அமைந்­துள்­ள­தால் விநி­யோ­கம் செய்­ய­வேண்­டி­யத் தேவை­யும் இருக்­காது," என்று 'அவர் தெம்­ப­னிஸ் ஹப்'பில் நடை­பெற்ற 'தெம்­ப­னிஸ் கோஸ் ஃபார்மிங்' எனும் 'விவ­சா­யத்­தில் இறங்­கும் தெம்­ப­னிஸ்' இயக்­கத்­தின் தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்­ட­போது திரு மச­கோஸ் கூறி­னார்.