எஃப்-1: மேலும் 3 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆதரவு

எஃப்-1: மேலும் 3 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆதரவு

1 mins read
64ddf72f-0743-484e-8b47-711dcb3913ac
இவ்வாண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது எஃப்-1 பந்தயம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் எஃப்-1 பந்தயத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மேலும் மூவாண்டுகளுக்குத் தலைமை ஆதரவாளர் நிறுவனமாக இருக்கும்.

அதற்கு வகைசெய்யும் புதிய ஒப்பந்தம் இவ்வாண்டு நடைபெறவுள்ள எஃப்-1 கிராண்ட் ப்ரீ பந்தயத்திலிருந்து நடப்புக்கு வரும்.

வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதியன்று சிங்கப்பூரில் எஃப்-1 இரவு நேர விரைவுக் கார் பந்தயம் தொடங்கும்.

கொள்ளைநோய்ப் பரவலால் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு பந்தயம் இங்கு அரங்கேறவுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தயத்தில் ஃபெராரி கார் குழுவின் செபேஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்.