சிறந்த விமான சேவை பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 5ஆம் இடத்தில்; கத்தார் ஏர்வேஸ் தொடர்ந்து முதலிடம்

2022ஆம் ஆண்டிற்கான சிறந்த விமானச் சேவை பட்டியலை 'ஏர்லைன்ஸ்ரேட்டிங்க்ஸ்' அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

கத்தார் ஏர்வேஸ் இவ்வாண்டிற்கான சிறந்த விமானச் சேவை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.

விமானச் சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் கத்தார் நாட்டின் டோஹா நகரை மையமாகக் கொண்ட கத்தார் ஏர்வேஸ் விமானச் சேவை முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் கத்தார் ஏர்வேய்ஸ் முதலிடம் வகித்தது. கொரோனா கால கட்டத்திலும் மக்கள் சேவைக்காக கத்தார் ஏர்லைன்ஸ் விமானச் சேவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.


இதன் பயணிகள் சேவை, தொடர்ச்சியான விமான இயக்கம் போன்ற காரணங்களால் கத்தார் ஏர்வேஸ், உலகின் சிறந்த விமானச் சேவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த பட்டியலில், ஏர் நியூசிலாந்து மற்றும் எட்டிஹாட் ஏர்வேஸ் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ், குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில், தொடர்ந்து உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.


4ஆம் இடத்தில் தென் கொரியாவின் கொரியன் ஏர் விமானச் சேவையும் 5ஆம் இடத்தைச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவையும் பிடித்தன.
20 இடங்கள் கொண்ட இந்த பட்டியலில், ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!