இல்லப் புதுப்பிப்பு குத்தகைதாரர்கள் மீதான புகார்கள் 28% அதிகரிப்பு

இல்லப் புதுப்பிப்பு குத்தகைதாரர்கள் மீதான புகார்கள் 28% அதிகரிப்பு

1 mins read
d43908c6-8a00-49c1-aa1b-a8280b7db105
-

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இல்லப் புதுப்பிப்பு குத்தகைதாரர்கள் மீதான புகார்கள் 28 விழுக்காடு அதிகரித்துள்ளன.

இல்லப் புதுப்பிப்பு நிறுவனங்களுக்கு எதிராக கேஸ்(CASE) எனும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தில் 807 புகார்கள் பதிவாகின.

கடந்த 2021ன் முதல் அரையாண்டில் பதிவான 627 புகார்களைவிட இவ்வாண்டில் 28% அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு புதுப்பிப்பு குத்தகைதாரர்கள் மீது 1,300 புகார்களைப் பெற்றது கேஸ். 2020ஆம் ஆண்டில் 869 புகார்கள் பதிவாகின.

புகார்களில் மூன்றில் இரு பங்கு, குறித்த நேரத்தில் குறிப்பிட்ட பணியை முடித்துக்கொடுக்காதது, வேலையில் திருப்தியின்மை போன்றவை ஆகும்.