மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் (சிஎன்பி) சேர்ந்த அதிகாரிகள் புதின்கிழமை இரு சிங்கப்பூரர்களைக் கைது செய்தனர்.
அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். 6 கிலோ போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ஏறக்குறைய $313,000 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 1,983 கிராம் ஹெராயின், 270 கிராம் ஐஸ், 4,193 கிராம் கஞ்சா, ஏழு போத்தல் மெத்தடோன் ஆகியவை பிடிபட்ட போதைப்பொருள்களில் அடங்கும்.
கைப்பற்றப்பட்ட ஹெராயின், ஏறக்குறைய 900 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன் படுத்த போதுமானது.
அதேபோல், சுமார் 600 புழங்கி கள் ஒரு வாரம் பயன்படுத்தும் அளவுக்கு கஞ்சா பிடிபட்டுள்ளது.
கைதான இரண்டு சிங்கப்பூரர்களில் ஒருவர் 41 வயது ஆடவர். மற்றொருவர் 34 வயது மாது.
அந்த இரு சிங்கப்பூரர்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

