இவ்வாண்டின் தேசிய தின செய்தியைப் பிரதமர் லீ சியன் லூங் இம்மாதம் 8ஆம் தேதி மாலை வழங்குவார்.
தேசிய தினத்திற்கு முதல் நாள், திங்கள்கிழமை மாலை 6.45 மணிக்கு பிரதமர் லீ தமது செய்தியை சிஎன்ஏ-வில் நேரடியாக ஆங்கிலத்தில் வழங்குவார்.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பிரதமர் செய்தியின் தமிழாக்கத்தை அதே நாளில் இரவு 9 மணிக்கு வசந்தம் ஒளிவழியிலும் ஒலி 96.8 வானொலி ஒலிவழியிலும் வழங்குவார்.
தேசிய நாள் செய்தியை நான்கு மொழிகளிலும் பிரதமர் அலுவலக இணையத்தளத்திலும் (www.pmo.gov.sg) யூ டியூப் சேனலிலும் (www.youtube.com/pmosingapore) காணலாம்.

