மொடர்னா நிறுவனத்தின் 'ஸ்பைக்வேக்ஸ்' கொவிட்-19 இருவகை ஆற்றல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் பலர் முன்வந்திருக்கின்றனர்.
இருவகை ஆற்றல் தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான நேற்று பல 'ஜெடிவிசி' எனும் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் கூட்டம் திரண்டது.
காக்கி புக்கிட்டில் உள்ள பரிசோதனை, தடுப்பூசி நிலையத்தில் மட்டும் நேற்று காலை 10.15 மணிக்கு 50க்கும் அதிகமானோர் திரண்டதாக அங்கு சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தோரில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள்.
காலை 11 மணியளவில் கூடு தலானோர் அங்கு திரளத் தொடங்கினர். எனினும், முந்தைய கொவிட்-19 தடுப்பூசித் திட்டங்களில் இடம்பெற்றதைப் போல் வந்த வர்களுக்கு துரிதமாகத் தடுப்பூசி போடப்பட்டது.
முதலில் தலைதூக்கிய கொவிட்-19 கிருமி, ஓமிக்ரான் வகை கிருமி ஆகிய இரண்டுக்கும் எதிராகப் புதிய இருவகை ஆற்றல் தடுப்பூசி பாதுகாப்பு வழங்குகிறது.
இதுவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான காரணம் என்று புதிய இருவகை ஆற்றல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலர் கூறினர்.
'எக்ஸ்பிபி' ஓமிக்ரான் கிருமிப் பரவலால் சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் கூடுதல் பாதுகாப்பை பெறுவதற்காக புதிய தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக வேறு சிலர் கூறினர்.
விரைவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிலரும் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட டனர்.
புதிய வகை கொவிட்-19 கிருமிகளுக்கு எதிராக இருவகை ஆற்றல் தடுப்பூசி கூடுதல் பாதுகாப்பு வழங்குவதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
குறைந்தது ஐந்து மாதங்களுக்கு முன்பு கடைசி தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 50 வயதைத் தாண்டியோர், முன்பதிவின்றி ஒன்பது பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று புதிய தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
https://www.gowhere.gov.sg/vaccine எனும் இணையத்தளத்துக்குச் சென்று பரிசோதனை, தடுப்பூசி நிலையங்கள் எங்கு இடம்பெற்று உள்ளன என்பது குறித்த விவரங் களைப் பெறலாம்.

