சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையே மின்னிலக்கத்துறை, பசுமைப் பொருளியல் துறை ஆகியவற்றில் கூட்டுறவை இனி எதிர்பார்க்கலாம். அதிபர் ஹலிமா யாக்கோப் வியட்னாமின் ஹனோய், ஹோ சி மின் நகரங்களுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமது ஐந்து நாள் பயணத்தின் முடிவில் நேற்று செய்தியாளர்
களிடம் பேசினார் திருவாட்டி ஹலிமா.
வியட்னாமின் பிரதமர் பாம் மின் சின் சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையே மேற்கண்ட துறைகளில் கூட்டுறவை வளர்த்துக்கொள்வது பற்றி தம்மிடம் கேட்டுகொண்டார் என்று குறிப்பிட்டார் அதிபர் ஹலிமா.
அந்த யோசனையைத் தாம் பாராட்டியதுடன் இரு நாடுகளும் இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் திருவாட்டி ஹலிமா கூறினார்.
இரு நாடுகளும் ஆசியான் எரிசக்தி கட்டமைப்பை உருவாக்கவும் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வியட்னாமின் 3,260 கிலோமீட்டர் நீளமுள்ள கரையோரத்தில் சூரிய சக்தியையும் காற்றின் சக்தியையும் எரிசக்தியாக மாற்றும் வசதிகளைக் கொண்டது என்று அதிபர் ஹலிமா சுட்டினார்.
இத்தகைய கூட்டு முயற்சிகள் ஒரே நாளில் நடந்துவிடபோவதில்லை என்று கூறிய அதிபர், இதற்கு சற்று காலம் எடுக்கும் என்றாலும் தொடர்ந்து இத்திட்டங்களுக்கான உந்துதல் இருப்பது அவசியம் என்றார்.

