ஊழியர் மரணம்; முதலாளிக்கு $200,000 அபராதம்

ஊழியர் மரணம்; முதலாளிக்கு $200,000 அபராதம்

2 mins read
7baf0210-67a3-4456-9a9f-088187fc2484
-

கடந்த 2019ஆம் ஆண்டு வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வ­ரின் மர­ணத்­துக்கு இட்­டுச்­சென்ற விபத்­தின் தொடர்­பில், துறை­மு­கத்தை நடத்­தும் நிறு­வ­னத்­துக்கு பாது­காப்பு குறை­பா­டு­க­ளுக்­காக $200,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏஷியா பசி­ஃபிக் ஷிப்­யார்ட் (ஏபி­எஸ்) எனும் அந்த துறை­முக நடத்­து­நர், வேலை­யி­டப் பாது­காப்பு சுகா­தா­ரச் சட்­டத்­தின்­கீழ் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட பின்­னர் கடந்த புதன்­கி­ழமை அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. மனி­த­வள அமைச்சு நேற்று இதைத் தெரி­வித்­தது.

குறிப்­பாக அந்­நி­று­வ­னம், நியா­ய­மான, நடை­மு­றைக்கு ஏற்ற நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­த­தற்­கா­க­வும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது.

கடந்த 2019ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி, பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த ரஹ­மான் ஸிலுர், 30, மீது ஒரு துறை­மு­கத்­தில் பாரந்­தூக்கி மோதி­யது. ரஹ­மான் காயங்­கள் கார­ண­மாக சம்­பவ இடத்­தி­ய­லேயே உயிர் இழந்­தார்.

பாரந்­தூக்­கி­யைச் செலுத்­திய ஊழி­ய­ரான சண்­மு­கம் சிவ­ரா­சு­வுக்கு, இவ்­வாண்டு ஜூலை 21ஆம் தேதி அன்று 11 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. முறை­யான பயிற்சி இல்­லா­ம­லும், பாரந்­தூக்­கி­யின் பிரேக்­கு­கள் பழு­த­டைந்­தி­ருந்­தது என்று தெரிந்­தும் அவர் அதைச் செலுத்­தி­னார் என்­றது மனி­த­வள அமைச்சு. அவ­ரது பொறுப்­பற்ற செயல் ரஹ­மா­னின் மர­ணத்துக்குக் காரணம் என்று கூறப்­பட்­டது.

அர­சாங்­கத் தரப்பு மேல்­மு­றை­யீடு செய்­ததை அடுத்து, அவ்­வி­டத்­தில் பணி­யாற்­றிய குழு­வின் மேற்­பார்­வை­யா­ளர் எது­வாக்கா மாலி நாயு­டு­வுக்கு ஆகஸ்ட் 10 அன்று, 11 மாதம் சிறை விதிக்­கப்­பட்­டது. பயிற்சி பெறாத சண்­மு­கம் பாரந்­தூக்­கி­யைச் செலுத்த அவர் அனு­ம­தித்­தி­ருந்­தார்.

அவ்­வே­லை­யி­டத்தை இயக்­கிய பணி­செய்த ஏபி­எஸ் நிறு­வ­னம், அனு­மதி பெறாது பாரந்­தூக்­கி­கள் இயக்கப்படுவதைத் தடுக்கவில்லை என்றும் வேலை­யி­டத்­தில் பாரந்­தூக்­கி­கள் முறை­யாகப் பரா­ம­ரிக்­கப்படுவதையும் திறன்வாய்ந்த ஊழியர்கள் பழு­து­பார்ப்பதையும் உறுதி செய்யவில்லை என்றும் மனிதவள அமைச்சு கூறியது.