சாங்கி விமான நிலைய பொதுவிட சில்லறை விற்பனைக் கடைகளில் 8% ஜிஎஸ்டி இல்லை

சாங்கி விமான நிலைய பொதுவிட சில்லறை விற்பனைக் கடைகளில் 8% ஜிஎஸ்டி இல்லை

2 mins read
f7f03e9a-4477-46d9-88be-6e8be280181d
-

சாங்கி விமான நிலைய பொது இடங்­களில் உள்ள சில்­லறை விற்­பனைக் கடை­களில் பொருள்­கள் வாங்­கு­வோர் 2023ஆம் ஆண்டு முழு­மைக்­கும் 8% பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) கட்­டத் தேவை­யில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜிஎஸ்டி வரும் ஜன­வரி 1ஆம் தேதி முதல் ஏழு விழுக்­காட்­டி­லிருந்து எட்டு விழுக்­காட்­டுக்கு உய­ர­வி­ருக்­கிறது.

இதற்­குத் தகு­தி­பெற வாடிக்­கை­யா­ளர்­கள் சாங்கி ரிவார்ட்ஸ் உறுப்­பி­னர் திட்­டத்­தில் (Changi Rewards membership programme) இல­வ­ச­மாக சேர­லாம்.

சாங்கி விமான நிலைய பொது இடங்­களில் உள்ள சில்­லறை விற்­பனைக் கடை­களில் பொருள்­கள் வாங்­கும்­போது, ஜிஎஸ்டி வரியை கடை­களே செலுத்­தி­வி­டும் என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மம் (சிஏஜி) நேற்று தெரி­வித்­தது.

ஜிஎஸ்டி வரி விலக்கு ஜுவல் வளா­கத்­தில் உள்ள கடை­க­ளி­லும் உண­வ­கங்­க­ளி­லும் செல்­லு­ப­டி­யாகாது என்று தெரி­வித்த சிஏஜி, சாங்கி ஈட்ஸ் இணை­ய­வழி உணவு விநி­யோ­கச் சேவை, பேரங்­கா­டி­கள் போன்ற இத்­திட்­டத்­தில் சேராத இடங்­களுக்கும் வரி விலக்கு இருக்காது என்­றும் கூறி­யது.

ஜன­வரி மாதத்­தில் எட்டு நாள்­களுக்கு (ஜன­வரி 5 முதல் 8ஆம் தேதி வரை, ஜன­வரி 12 முதல் 15ஆம் தேதி வரை) பொருள் களுக்கு 8% ஜிஎஸ்டி கழிவுடன் கூடுதலாக மேலும் 8% கழிவு வழங்கப்படும் என்று சிஏஜி சொன்­னது.

இதற்­குத் தகு­தி­பெற, வாடிக்­கை­யா­ளர்­கள் விலைக் கழி­வு­களைத் தவிர்த்து குறைந்­தது $30க்கு பொருள்­களை வாங்­கி­யிருக்க வேண்­டும்.

"இந்­தச் சலுகை, விழாக்­காலத்தை வர­வேற்­கும் வாடிக்­கை­யாளர்­க­ளுக்கு மகிழ்ச்­சியை ஏற்­படுத்­தும் என நம்­பு­கி­றோம். இது­போன்ற சலு­கையை நாங்­கள் 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து வழங்கி வரு­கிறோம்," என்­றார் சிஏஜி குழு­மத்­தின் சலு­கை­கள் பிரி­வின் பொது மேலா­ளர் போ ஹுய் ஹூன்.

சீனப் புத்­தாண்டு விலைச் சலு­கை­க­ளை­யும் சாங்கி விமான நிலை­யம் அதன் பொதுவிட சில்­லறை விற்­ப­னைக் கடை­களில் நடத்­தும்.

சாங்கி விமான நிலை­யத்தில் எந்­தெந்தக் கடை­களில் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்­கப்­படு­கிறது, எந்­தெந்த கடை­களில் இரு­ம­டங்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்­கப்­படு­கிறது என்பன போன்ற விவ­ரங்­களை www.changiairport.com/2xgst எனும் இணை­யப் பக்­கத்­தில் காண­லாம்.