தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பதிவு வரும் ஜூலை மாதம் நான்காம் தேதியன்று தொடங்கும்.
இது, அடுத்த ஆண்டு தொடக்கநிலை ஒன்றில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும்.
பதிவுக்கான புதிய தளத்தைப் பெற்றோர் பயன்படுத்தலாம்.
1, 2A, 2B, 2C, 2C சப்ளிமென்டரி ஆகிய ஐந்து கட்டங்களுக்கும் புதிய தளத்தை உபயோகிக்கலாம்.
அத்தளம் ஜூலை மாதம் நான்காம் தேதியன்று பயன்பாட்டுக்கு வரும்.
தொடக்கநிலை ஒன்றுக்குப் பதிவுசெய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் புதிய தளம் இடம்பெறும்.
சிங்பாஸ் விவரங்களைக் கொண்டு பெற்றோர் புதிய தளத்தைப் பயன்படுத்தவேண்டும்.