சிங்கப்பூர் வந்துள்ள அமெரிக்க, சீன தற்காப்பு அமைச்சர்கள்

சிங்கப்பூர் வந்துள்ள அமெரிக்க, சீன தற்காப்பு அமைச்சர்கள்

03 Jun 2023 - 5:30 am

2 mins read

அமெரிக்கா, சீனா, மலேசியா உட்பட

பல நாட்டு தற்காப்பு அமைச்சர்களை சிங்கப்பூர் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இவ்­வார இறு­தி­யில் ஷங்­ரிலா ஹோட்­ட­லில் நடை­பெ­றும் பாது காப்பு கலந்­து­ரை­யா­ட­லில் பங்கேற்பதற்காக பல நாட்டு அமைச்சர்கள் சிங்கப்பூர் வந்து உள்ளனர். முன்­ன­தாக சீன தற்­காப்பு அமைச்­ச­ரான லி ஷாங்­ஃபூவை நேற்று கருவூலக் கட்­ட­டத்­தில் தற்­கா­லிக பிர­த­மர் லாரன்ஸ் வோங் சந்­தித்­துப் பேசி­னார். சீன ஜென­ர­லின் சிங்­கப்­பூர் வருகை அவ­ரது அறி­மு­கப் பயணத்­தின் ஒரு பகு­தி­யா­கும்.

பிர­த­மர் லீ சியன் லூங்­குக்கு மீண்­டும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்­கா­லி­கப் பிர­த­மர் என்ற பொறுப்­பில் திரு லாரன்ஸ் வோங் உல­கத் தலை­வர்­க­ளைச் சந்­தித்து வரு ­கி­றார்.

மற்­றொரு நில­வ­ரத்­தில் அமெ­ரிக்கத் தற்­காப்பு அமைச்­ச­ரான லாயிட் ஆஸ்­டினை சிங்கப்பூர் தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென் சந்­தித்­தார். இந்த நிகழ்வு, கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­றும் ஷங்­ரிலா ஹோட்­ட­லில் இடம் பெற்றது. அடுத்த மூன்று நாள்­களில் பாது­காப்பு தொடர்­பான விவ­கா­ரங்­களை இந்தக் கலந்துரையாடலில் உல­கத் தலை­வர்­கள் விவா­திக்­க­வி­ருக்­கின்­ற­னர். சீன அமைச்­சர் திரு லி ஷாங்ஃபூ, கடந்த மார்ச் மாதம் அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் முறை­யாக சிங்­கப்­பூருக்கு வருகையளித்துள்ளார்.

சிங்­கப்­பூர்-சீனா பாது­காப்பு அமைச்­சர்­க­ளின் 2வது கலந்­து­ரை­யா­ட­லுக்­காக அவரை டாக்­டர் இங் வியா­ழக்­கி­ழமை சந்­தித்­தார். இரு நாடு­க­ளுக்கு இடையே உயர்­மட்ட தற்­காப்­புத் தொடர்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நேரடித் தொலை­பே­சி சேவையை அமைக்­கும் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது.

திரு லாரன்ஸ் வோங்­கும் ஜென­ரல் லியும் தங்­க­ளு­டைய சந்­திப்­பில் சிங்­கப்­பூர்-சீனா இடை­யி­லான நீண்­ட­கால இரு தரப்பு தற்­காப்பு நல்­லு­றவை மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர்.

2019ஆம் ஆண்­டில் செய்­து­கொண்ட மேம்­பட்ட தற்­காப்பு பரி­மாற்­றங்­கள் மற்­றும் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு (ஏடி­இ­எஸ்சி) உடன்­பாட்­டின்­கீழ் இரு­த­ரப்பு தற்­காப்பு ஒத்­து­ழைப்­பில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­களை இரு­வ­ரும் வர­வேற்­ற­னர்.

இந்­தத் தற்­காப்பு உடன்­பாட்­டில் இரு நாடு­களும் 2008ஆம் ஆண்­டில் கையெ­ழுத்­திட்­டன. பின்­னர் 2019ல் இரு­த­ரப்பு பயிற்சி, பரி­மாற்­றங்­களை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் உடன்­பாடு மேலும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டது.

திரு வோங்­கும் ஜென­ரல் லியும் உல­க­ளா­விய, வட்­டா­ரப் பாது­காப்பு குறித்த தங்­க­ளு­டைய கருத்­து­களைப் பரி­மா­றிக்­கொண்­ட­னர் என்று சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது. இதற்­கி­டையே வெள்­ளிக் கிழமை நடை­பெற்ற திரு ஆஸ்­டின் உட­னான சந்­திப்­பில் அமெ­ரிக்­கா­வில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­களின் பயிற்­சிக்கு அமெ ரிக்கா அளித்து வரும் நீண்­ட­கால ஆத­ர­வுக்கு டாக்­டர் இங் நன்றி தெரி­வித்­துக் கொண்­டார்.

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை அமெ­ரிக்­கா­வில் மூன்று நிரந்­தர பயிற்சி நிலை­யங்­களை வைத்­துள்­ளது. இதில் அரி­சோ­னா­வில் உள்ள பீஸ் கார்­வின்-II பயிற்சி நிலை­ய­மும் ஒன்று. இது, அண்­மை­யில் 30வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டி­யது.

திரு ஆஸ்­டி­னும் இவ்­வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வின் ராணுவ ஈடு­பாட்­டிற்கு அளித்து வரும் ஆத­ர­வுக்காக சிங்கப்பூருக்கு நன்றி தெரி­வித்­துக் கொண்­டார்.