கொள்ளைநோய் ஓய்ந்து ஒருவழியாக இந்த வட்டார நாடுகள் 2022ஆம் ஆண்டு தங்கள் எல்லைகளைத் திறந்து வெளிநாட்டினரை வரவேற்கத் தொடங்கின. இதைத் தொடர்ந்து தேசிய இளையர் மன்றம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்படி இளையர்கள் பலரை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது.
இதில் 20 விழுக்காட்டுக்கும் மேலான வட்டார நாடுகளுக்கான 7,000 பயண வாய்ப்புகள் பயன்
படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய மற்ற பயண வாய்ப்புகள் ஆண்டின் இரண்டாம் பாதியில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் என இவை யாவும் தேசிய இளையர் மன்ற ஆதரவுடன் வழங்கப்படுகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது 'ஏஷியா ரெடி எக்ஸ்போஷர் புரோகிராம்' என்ற திட்டமும் மற்ற பல பயணப் பரிமாற்றத் திட்டங்களும்.
இதன் பெரும்பாலான திட்டங்கள் தேசிய இளையர் மன்றம் உயர் கல்வி நிலையங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்கீழ் வருகின்றன. இதில் ஆகக் கடைசியாக சிங்கப்பூர் பல
துறைத் தொழிற்கல்லூரி இந்தத் திட்டத்தின்கீழ் மூன்றாண்டு பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதுபேன்ற ஒப்பந்தத்தில் முதன்முதலாக தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி 2021ஆம் ஆண்டு கையெழுத்திட்டது.
இது குறித்து விளக்கமளித்த தேசிய இளையர் மன்ற தலைமை நிர்வாகி டேவிட் சுவா, மன்றம் மற்ற பல பலதுறைத் தொழிற்கல்லூரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடனும் மற்ற பயண வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் திரு சுவா தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் யாவும் ஆசியாவில் உள்ள பல கலாசாரங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்தும் கல்வி அமைச்சின் நோக்கத்துடன் ஒத்துப்போவதாக கூறப்
படுகிறது.
இதில் உயர் கல்வி நிலையங்களில் பயிலும் 70 விழுக்காடு மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதை இலக்காக கல்வி அமைச்சு கொண்டுள்ளது.
அதிலும் வெளிநாடு செல்லும் மாணவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியா, சீனா, தென்
கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பது இலக்கு.
