ஸ்ரீ நாராயண மிஷன் கொண்டாடும் 75 ஆண்டு நிறைவு விழா

ஸ்ரீ நாராயண மிஷன் கொண்டாடும் 75 ஆண்டு நிறைவு விழா

1 mins read
c71f3e07-eaa7-4a5d-a714-639ae580a329
இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்ரீ நாராயண மிஷன் அதன் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூன் 17,18ஆம் தேதிகளில் வரலாற்று கண்காட்சி ஒன்றை இந்திய மரபுடைமை நிலையத்தில் அமைக்கும்.

ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் அமைப்பின் வரலாற்று தகவல்களுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் வளர்ச்சிக்கான திட்டங்களும் முயற்சிகளும் இந்த கண்காட்சியில் இடம்பெறும்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி டெனிஸ் புவா ஜூன் 17ஆம் தேதி அன்றும் மூத்த நாடாளுமன்றச் செயலாளர், கலாசார, சமூக, இளையர் அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரான திரு எரிக் சுவா ஜூன் 18ஆம் தேதி அன்றும் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

சமூகத்திற்கு சேவையாற்றும் அமைப்பான ஸ்ரீ நாராயண மி‌‌ஷனின் நடவடிக்கைகள், துடிப்பான முதுமைக்காலத்தையும் சுகாதார பராமரிப்பையும் கருத்தில் கொண்டவை.

ஸ்ரீ நாராயண மிஷன் கண்ணோட்டத்தில் தொண்டூழியம் குறித்த கலந்துரையாடலும் சிங்கப்பூர் அறப்பணி சூழலை ஆராய்வதுடன் அதில் ஸ்ரீ நாராயணன் மிஷனின் பங்கை விவரிக்கும் கலந்துரையாடலும் இந்த நிகழ்வில் இடம்பெறும். இந்த அங்கங்கள் குறிப்பிட்ட அளவில் பங்கேற்பாளர்களைக் கொள்ளும் என்பதால் முதல் வருபவர்களுகே முன்னுரிமை வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு https://sreenarayanamission.org/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்