குறிப்பிட்ட சில தொடுவில்லைகளை மீட்டுக்கொள்ளும் நிறுவனம்

குறிப்பிட்ட சில தொடுவில்லைகளை மீட்டுக்கொள்ளும் நிறுவனம்

1 mins read
cbdc44e5-1738-4845-8001-cd9e7f08851c
‘பயோஃபினிட்டி’ தொடுவில்லைகளின் தொகுதிகளில் துகள்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஐஸ்டாக்

‘கூப்பர்விசன்’ நிறுவனத்தின் ஒருமுறை மட்டும் பயன்படுத்தத்தக்க தொடுவில்லைகளின் (Contact lens) குறிப்பிட்ட சில தொகுதிகள் மீட்டுக்கொள்ளப்படும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடுவில்லைகள் சிலவற்றில் வேறு துகள்கள் இருந்ததால் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

‘பயோஃபினிட்டி’ தொடுவில்லைகளின் தொகுதிகளில் துகள்கள் இருந்ததாக ஆணையம் குறிப்பிட்டது. இருப்பினும், அவை எத்தகைய துகள்கள் என்று தெரிவிக்கப்படவில்லை. மீட்டுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொடுவில்லைகளின் தொகுதி எண்கள்: 12908000914028, 12908050243028, 12908050254028, 12908050265028.

தொடுவில்லைகளின் பெட்டிகளுக்குப் பின்னால் அவற்றின் தொகுதி எண்களைக் காணலாம்.

சிங்கப்பூரில் மட்டும் 11,868 தொடுவில்லைகளில் துகள்கள் உள்ளதாக ஆணையம் கூறியது. எனினும், இதுவரை துகள்கள் உள்ள தொடு வில்லைகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டதாக புகார் எதுவும் பதிவாகவில்லை.

துகள்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்ட தொடு வில்லைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்தொகுதி தொடுவில்லைகளைப் பயன்படுத்தியவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் சுகாதார அறிவியல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்