அதிபர் ஹலிமா யாக்கோப் அதிபராக தமது கடைசி அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கத்தாருக்கு திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அவர் பயணம் செய்கிறார்.
கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானியின் அழைப்பை ஏற்று அதிபர் ஹலிமா அங்கு செல்கிறார்.
திருவாட்டி ஹலிமா 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு தலைவரும் மன்னர் ஷேக் தமிம் தான்.
அதிபர் ஹலிமாவுக்கு தலைநகர் டோஹாவில் வரவேற்பு கொடுக்கப்பட்டு விருந்தளிக்கப்படுகிறது.
கலை உலகின் ராணி எனக் கூறப்படும் கத்தாரின் தேசிய அரும்பொருளகத்திற்கும் அதிபர் ஹலிமா செல்கிறார்.
கத்தாரில் வசிக்கும் சிங்கப்பூரர்களை அதிபர் சந்திப்பார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
திருவாட்டி ஹலிமாவுடன் அவரது கணவர் திரு முகமது அப்துல்லா அல்ஹப்சீ, கல்வி வெளியுறவுக்கான இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், கலாசார, சமூக, இளையர், வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹென்றி குவேக், ஷரீல் தாஹா சென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து கத்தாருக்கு செல்லும் இரண்டாவது அதிபர் திருவாட்டி ஹலிமா.
இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு அதிபராக இருந்த திரு எஸ் ஆர் நாதன் கத்தாருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார்.
கத்தாருடனான அரசதந்திர உறவை 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சிங்கப்பூர் தொடங்கியது.