ஹுயுண்டாயின் சிங்கப்பூர் ஆலை திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு

ஹுயுண்டாயின் சிங்கப்பூர் ஆலை திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு

1 mins read
df9b4121-9198-4c44-a4e1-5a1173dbb22e
சிங்கப்பூரில் கட்டப்பட்டுவரும் ஹுயுண்டாய் நிறுவனத்தின் ஆலையைச் சித்திரிக்கும் ஓவியம். - படம்: ஹுயுண்டாய் மோட்டோர் குழுமம்

சிங்கப்பூரில் கட்டப்படும் ஹுயுண்டாய் மோட்டோர் நிறுவனத்தின் ஆலை 2023ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஓராண்டுக்கு முன்பு அதைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஜூரோங் வட்டாரத்தில் கட்டப்பட்டுவரும் ‘ஹுயுண்டாய் மோட்டோர் குரூப் இனொவேஷன் சென்டர்’ என்ற ஹுயுண்டாயின் ஆலையை முதலில் 2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டது.

அதற்குப் பிறகு ஆலையைத் திறப்பதற்கான தேதி 2023ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டது அதற்குக் காரணம்.

இப்போது திறப்பு விழா 2023ஆம் ஆண்டு நான்காம் காலாண்டுக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்படாத காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது இதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்