சிங்கப்பூரின் தேசிய விளையாட்டு நிர்வாக அமைப்பான ஸ்போர்ட் சிங்கப்பூர், ஆக்டிவ்எஸ்ஜி இயக்க உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது.
தன்னுடைய விளையாட்டு இடங்களுக்கான முன்பதிவுகளை உறுப்பினர்கள் யாராவது விற்றால், விளையாட்டு இடங்களை முன்னதாகவே உறுதிப்படுத்திக்கொள்ள உதவும் செயலிகளைப் பயன்படுத்தினால் அவர்கள் தற்காலிகமாக உறுப்பியத்தில் இருந்து நீக்கப்படும் நிலைமை ஏற்படும் என்று அந்த மின்னஞ்சல் எச்சரித்து இருக்கிறது.
தொடர்ந்து அவ்வாறு யாராவது செய்தால் அவர்கள் இரண்டாவது முறை சட்டதிட்டத்தை மீறினால் ஜூலை 1 முதல் அவர்களின் கணக்குகள் முடிவுக்கு வந்துவிடும்.
நீங்கள் வாங்கி இருப்பதை மற்றவர்களுக்கு விற்பதும் விளையாட்டு இடங்களை முன்னதாகவே உறுதிப்படுத்த செயலிகளைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டு இருக்கின்றன என்று ஆக்டிவ்எஸ்ஜி தலைவர் டான் ஹோக் லியோங் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டார்.


