பெண்களிடம் பாலியல் குற்றங்கள் புரிந்தவருக்குச் சிறை

பெண்களிடம் பாலியல் குற்றங்கள் புரிந்தவருக்குச் சிறை

1 mins read
2c936643-ab0f-4a85-81fa-8e10fa64a49a
குற்றவாளி தியோ ஜுன் ஹாவ். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏழு பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆடவருக்கு 15 மாதங்கள் நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 22 வயது தியோ ஜுன் ஹாவ், தன்மீது சுமத்தப்பட்டிருந்த ஒன்பது குற்றச்சாட்டுகளை ஜனவரி மாதத்தில் ஒப்புக்கொண்டார்.

சிறார், இளம் வயதினர் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

வாட்ஸ்அப் மூலம் தெரிந்துகொண்ட பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றங்களை தியோ புரிந்தது நீதிமன்றத்தில் தெரிய வந்தது.

குறிப்புச் சொற்கள்