வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 2,000 பெட்டிகள் பறிமுதல்; இருவர் கைது

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 2,000 பெட்டிகள் பறிமுதல்; இருவர் கைது

1 mins read
6603eea8-5f83-4ce3-bc3a-5c970dfe03dc
வேனில் இருந்த சிகரெட்டுகள். - படம்: சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

சுமார் 231,730 வெள்ளி மதிப்பிலான பொருள், சேவை வரியைச் செலுத்தாததன் தொடர்பில் ஒரு சிங்கப்பூரரும் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டனர்.

ஜாலான் பூன் லே, கெம்பாங்கானில் இருக்கும் சினாங் கிரெசண்ட் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த 2,165 பெட்டிகளை சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜாலான் பூன் லேயில் நடந்த சோதனையில், ஒரு வேன் வாகனத்தின் கதவைத் திறந்துகொண்டிருந்த 47 வயது சிங்கப்பூரரும் வேனுக்கு அருகே நின்றுகொண்டிருந்த சீனாவைச் சேர்ந்த 27 வயது ஆடவரும் கைதானவர்கள்.

அவர்கள் சிகரெட் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கடத்தல்கட்டணம்