வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் புதன்கிழமை கடைசி ஏலத்தில் ஏற்ற இறக்கமாக இருந்தது.
என்றாலும்கூட, இந்த சான்றிதழ் வரம்புமுறை 1990ல் தொடங்கப்பட்டது முதல் ஆக அதிக கட்டணங்களில் ஒன்றாகவே இந்த ஏலக் கட்டணம் இருந்தது.
சிறிய, இயந்திர ஆற்றல் குறைந்த கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் இரண்டு வாரங்களுக்கு முன் $98,001 ஆக இருந்தது. அது இந்த ஏலத்தில் $96,206 ஆகக் குறைந்தது.
பெரிய, அதிக ஆற்றலைக் கொண்ட கார்களுக்கான சான்றிதழ் கட்டணம் $121,000 ஆகக் கூடியது. இது சென்ற ஏலத்தில் $120,702 ஆக இருந்தது.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் சென்ற ஏலத்தில் $120,889 ஆக இருந்தது. அது $123,000 ஆகக் கூடியது.
வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் $81,801லிருந்து $83,140க்கு உயர்ந்தது. $11,001ஆக இருந்த மோட்டார் சைக்கிளுக்கான சான்றிதழ் கட்டணம் $10,709 ஆகக் குறைந்தது.