எஸ்பிஎச் ஊடக செய்தித்தாள் விற்பனை விவகாரம்; குழுவின் எட்டு கண்டுபிடிப்புகள்

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (எஸ்பிஎச்) தனது அன்றாட செய்தித்தாள் விற்பனை எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூறி இருக்கிறது என்பது அதன் கணக்குத் தணிக்கை, இடர் குழுவின் அறிக்கை மூலம் தெரியவருகிறது.

அந்தக் குழு கண்டுபிடித்து இருக்கும் சில அம்சங்களைப் பொறுத்தவரை, அவை குற்றச்செயல்களாக இருக்கக்கூடும் என்று அந்தக் குழுவும் ஆலன் & கிளெட்ஹில் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்களும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

அதனையடுத்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கீழ்கண்ட ஏற்பாடுகளில் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட ஆலோசகர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

1. கல்வி நிதியில் செய்தித்தாள்கள் மற்றும் மொத்தப் பிரதிகள்

மொத்தப் பிரதிகள் என்பவை தள்ளுபடி விலையில் அல்லது இலவசமாக அதிக எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுபவை. அந்தப் பிரதிகளை நிறுவனங்கள் வாங்கும் அல்லது பொறுப்பாதரவு அளிக்கும். அல்லது மிகவும் தள்ளுபடி விலையில் என்ஐஇ நிதி மூலம் அதற்குத் தொகை கொடுக்கப்படும்.

2. எக்ஸ் (X) பரிவர்த்தனை உடன்பாடு

எஸ்பிஎச், 2013க்கும் 2022க்கும் இடையில் ‘எக்ஸ்’ (X) என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி நிறுவனம் ஒன்றுடன் பரிவர்த்தனை உடன்பாட்டைக் கொண்டிருந்தது.

அந்த உடன்பாட்டின்படி, 10,000 ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (எஸ்டி) மற்றும் 5,000 பிஸ்னஸ் டைம்ஸ் (பிடி) மின்னிலக்க சந்தாக்களுக்கு மாறாக எஸ்பிஎச் நிறுவனத்துக்கு எக்ஸ் நிறுவனம் தனது மின் செய்தித்தாள், மின்னிலக்கச் சந்தாக்களை வழங்கும்.

3. பள்ளிக்கூடப் பிரதிகள்

எஸ்பிஎச் வெளியீடுகள் இரண்டு உடன்பாடுகளின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

4. அவதார் பிரதிகள்

இவை என்ஐஇ மொத்தப் பிரதிகளையும் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் காலத்தில் விநியோகிக்கப்படாத பிரதிகளையும் குறிப்பவை.

5. ஒய் (Y) உடன்பாடு

கடந்த 2013 முதல் 2022 மார்ச் வரை ஒய் (Y) என்று மட்டும் குறிப்பிடப்பட்டு உள்ள ஒரு நிறுவனம், 5,000 ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அன்றாடப் பிரதிகளை அச்சிட்டு விநியோகிப்பதற்காக மாதாமாதம் எஸ்பிஎச் நிறுவனத்துக்கு ராயல்டி தொகையை வழங்கியது.

6. விமான நிறுவனப் பிரதிகள்

2018 அக்டோபர் முதல் பெயர் குறிப்பிடப்படாத ஒரு விமான நிறுவனம் எஸ்பிஎச் நிறுவனத்துடன் ஓர் உடன்பாட்டைக் கொண்டிருந்தது.

பல்வேறு எஸ்பிஎச் ஊடக மற்றும் எஸ்டி, பிடி, வான் பாவ், ஷின் மின், சாவ் பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகிய எஸ்பிஎச் செய்தித்தாட்களின் மின்னிலக்கப் பிரதிகளை வரம்பில்லாத அளவுக்குப் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அந்த நிறுவனம் எஸ்பிஎச் நிறுவனத்துக்கு மாதாமாதம் தொகை அளித்தது.

7. முகவை சந்தாக்கள்

எஸ்பிஎச், 2019 அக்டோபர் 1 முதல் 2022 செப்டம்பர் 30 வரை இரண்டு முகவைகளுடன் ஓர் உடன்பாட்டைக் கொண்டிருந்தது.

அதன்படி ஒவ்வொரு முகவைக்கும் சுமார் 4,500 மின்னிலக்க கூப்பன் அனுமதிகளை எஸ்பிஎச் வழங்கியது.

அவற்றைக் கொண்டு அந்த முகவைகள் குறிப்பிட்ட கட்டணத்தில் கைப்பேசிச் செயலியிலும் இணையத்தளத்திலும் எஸ்டி இணையத்தளத்தை மூன்றாண்டுகளுக்கு எட்டலாம்.

8. அனைத்தும் ஒன்றில் என்ற சந்தா ஏற்பாடு

இந்த ஏற்பாடு 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தாதாரர்களுக்கு அச்சு மற்றும் மின்னிலக்கப் பிரதிகள் கிடைக்க இந்த ஏற்பாடு வழிசெய்தது. 2016வாக்கில் சில சந்தாதாரர்கள் அச்சு நாளிதழ்கள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டனர். என்றாலும் அவர்கள் அதே தொகையைக் கொடுத்தனர்.

இதனிடையே, எஸ்பிஎச் ஊடகம் தன்னுடைய கட்டுப்பாட்டு ஏற்பாடுகளையும் இடர்களை நிர்வகிக்கக்கூடிய தன் ஆற்றலையும் மேம்படுத்தப்போவதாக நேற்று தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!