சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்விதமாகப் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
வருகையாளர்கள் விலங்கியல் தோட்டத்தில் உள்ள பூச்சிகளைத் தொடுவது, அவற்றுக்கு உணவுகள் கொடுப்பது போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தோட்டத்தில் உள்ள அதிகாரிகள் அவற்றை எப்படிக் கையாள்கின்றனர் என்பதையும் வருகையாளர்கள் காணலாம்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் புதிய ஏற்பாடு தொடங்குகிறது. வார நாள்களில் நுழைவுச்சீட்டின் விலை 118 வெள்ளி. வாரயிறுதியில் அது 148 வெள்ளி.
நுழைவுச்சீட்டுகளை விலங்கியல் தோட்டத்தின் இணையப்பக்கம் வழியாக வாங்கலாம்.
முதுகெலும்பில்லாத பூச்சிகள் எப்படிச் சுற்றுச்சூழலுக்கு முக்கியமானதாகத் திகழ்கின்றன என்பதையும் பூச்சிகள் பற்றி தெரியாத சில விவரங்களையும் இந்த புது ஏற்பாடு மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தோட்டம் தெரிவித்தது.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் முதன்முதலாகத் தொடங்கும்போது 272 விலங்குகள் இருந்தன. இப்போது 4,200க்கும் அதிகமான விலங்குகள் இருக்கின்றன.


