சிங்கப்பூரில் ஜூன் 11ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை 270 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின.
அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 65 விழுக்காடு அதிகரித்துள்ளது. அந்த வாரத்தில் மட்டும் 163 சம்பவங்கள் பதிவாகின.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை நிலவரப்படி டெங்கி பரவும் பகுதிகளாக 44 இடங்கள் உள்ளன. அவற்றில் மூன்று இடங்கள் அதிக அபாயம் அல்லது 10க்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவான இடம்.
தோ பாயோ வட்டாரத்தில் டெங்கிச் சம்பவங்கள் 139ஆக அதிகரித்துள்ளது.
டெங்கி பரவும் பகுதிகளை தேசியச் சுற்றுப்புற அமைப்பின் இணையப்பக்கம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஏடிஸ் ஏகிப்டி கொசுக்கள் மூலம் டெங்கித்தொற்று பரவுகின்றன. அவை தேங்கியிருக்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.
இவ்வாண்டில் இதுவரை 3,865 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளான.

