வெளிநாட்டு ஊழியர்களின் தந்தையர் தினக் கொண்டாட்டம்

வெளிநாட்டு ஊழியர்களின் தந்தையர் தினக் கொண்டாட்டம்

2 mins read
69a41d5a-17fa-44cc-93df-bb3d67eb1ea6
வெஸ்ட்லைட் ஜாலான் பாப்பான் தங்குவிடுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடிய தந்தையர் தின விழா.  - படம்: சாமுவேல் குமார்
multi-img1 of 2
வெஸ்ட்லைட் ஜாலான் பாப்பான் தங்குவிடுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடிய தந்தையர் தின விழா.

வெஸ்ட்லைட் ஜாலான் பாப்பான் தங்குவிடுதியைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் தந்தையர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ‘கம்யூனிட்டி ஆஃப் பிரேய்ஸ் பேப்டிஸ்ட்’ தேவாலயத் தொண்டூழியர் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சுமார் 7,200 வெளிநாட்டு ஊழியர்கள் பங்குகொண்டனர்.

காற்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களும் பங்குகொண்டோருக்கு அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.  ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவில் ஊழியர்கள் தங்களுடைய உடல்நிலையை அறிந்துகொள்ள சுகாதாரப் பரிசோதனைச் சாவடிகளும் இடம்பெற்றன. இரட்சண்ய சேனையுடன் இணைந்து, மறுபயனீட்டுப் பொருள்களைக் குறைந்த விலையில் விற்கும் கூடமும் இடம்பெற்றது. 

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சாமுவேல் குமார், 59, “குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்களான தந்தையரும் மகன்களும் தந்தையர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்தோம்,“ என்று கூறினார். 

கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் திரு பாண்டியன் செல்வமுருகன், 34, “தனிமை உணர்வை அகற்றி, உற்சாகத்தை இந்தக் கொண்டாட்டம் அளித்தது. என்னுடைய 5 வயது மகனுக்கும் 60 வயது தந்தைக்கும் காணொளி அழைப்புவழி கொண்டாட்டத்தைக் காண்பித்தேன்,“ என்றார். 

“கேளிக்கை, பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்லாமல் இந்நிகழ்வில் நடந்த திறன் மேம்பாட்டு வகுப்புகள் பயனுள்ளதாக இருந்தன,“ என்று கூறினார் ‘வெல்டிங்’ துறையில் பணிபுரியும் திரு முருகன் ஆனந்தன், 30. 

சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக கட்டுமான மேற்பார்வையாளராகப் பணிபுரியும் திரு காமராஜ் சிவா, 34, “நண்பர்களுடன் போட்டிகளில் கலந்துகொண்டது என் பள்ளி நாள்களை நினைவூட்டின. வெளிநாட்டு ஊழியர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் எங்கள் நலனைக் கருதி ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வரவேற்கிறேன்,“ என்று சொன்னார்.

குறிப்புச் சொற்கள்