தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்ப அலுவலகங்களுக்குப் புதிய சலுகைகள்

1 mins read
b138fd31-cddd-47ca-817f-0cd481b4e325
சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் பொன்விழாவில் கலந்துகொண்டு பேசிய மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள குடும்ப அலுவலகங்களுக்குப் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளன.

குடும்ப அலுவலகங்களுக்கான வரிச் சலுகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் அடுத்த மாதம் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறப்பணிகளுக்குப் பங்களிக்கும் குடும்ப அலுவலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதலீடுகள் அடிப்படையில் சிங்கப்பூருக்குப் பெருமளவிலான செல்வத்தை குடும்ப அலுவலகங்கள் தருவதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறினார். நேற்று முன்தினம் ஷ்ங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் பொன்விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

சிங்கப்பூரில் மையப்படுத்தப்பட்ட வர்த்தக நிதிப் பரிவரத்தனைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க தகவல் பதிவு ஒன்றை சங்கம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்