ஜூரோங்கில் சமூக விவசாயிகளாக குடியிருப்பாளர்கள்

ஜூரோங்கில் வீவக பல மாடி கார் நிறுத்தத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் குடியிருப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடத் தொடங்கி உள்ளனர்.

குடியிருப்பாளர்களுக்கு பசுமை நிறைந்த சூழலை ஏற்படுத்தும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஆக அண்மைய நடவடிக்கைகளின் ஒரு பகுதி இந்த மாடித் தோட்ட நடவடிக்கை.

ஜூரோங்கின் வீவக கார்நிறுத்தப் பேட்டையின் முதல் மாடித் தோட்ட நடவடிக்கையில் 89 தோட்டங்கள் இடம்பெற்று உள்ளன. இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் 81 குடும்பங்கள் ஈடுபட்டு உள்ளன.

பூன் லே உயர்நிலைப் பள்ளி, மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் எனப்படும் பாலர் பள்ளி, புளோக் 673 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் உள்ள மாடித் தோட்டம் ஆகியனவும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

அண்டைவீட்டார் ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடவும் இந்த சமூகத் தோட்டங்கள் உதவிபுரிகின்றன.

இவற்றில் காய்கறிகள், மூலிகைச் செடிகள் மற்றும் அலங்காரத்திற்கான பூச்செடிகளையும் தங்களது மாடித் தோட்டத்தில் வளர்க்கத் தொடங்கி உள்ளனர்.

ஒவ்வொருவரும் தங்களின் காய்கறி, செடி வேளாண்மை அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். தாவரச் செடிகளைப் பயிரிட்டு அவற்றை அறுவடை செய்வது வரையிலான ஒவ்வொரு நடவடிக்கையையும் ஒருவரிடம் இருந்து ஒருவர் தெரிந்து கொள்கின்றனர்.

இந்த மாடித் தோட்ட அனுபவம் கம்போங் உணர்வைத் தோற்றுவிப்பதாக ஜூரோங்வாசியான டேவிட் யூ என்பவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

“காலையில் ஒருவரைப் பார்த்து வணக்கம் சொல்வது மட்டுமே வழக்கமாக இருந்து வந்தது. தற்போது அது பயனுள்ள தகவல் பரிமாற்றமாக மாறி இருக்கிறது.

“தோட்ட அனுபவங்களைக் கடந்து, தேவையுள்ளோருக்கு உதவுவது, சமூகத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவது போன்றவை குறித்தும் குடியிருப்பாளர்கள் கலந்து ஆலோசிக்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நான்கு மாடித் தோட்டங்களுக்கான முன்னோடித் திட்டம் உட்லண்ட்ஸ் மற்றும் செம்பவாங்கில் இடம்பெற உள்ளது. இவற்றை நிறுவும் பணிகள் 2024ல் நிறைவுபெறும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பசுமை நகர்த் திட்டத்தின்கீழ் இவை இடம்பெறும்.

இந்த பத்தாண்டுத் திட்டம் 2020ல் தொடங்கியது. மாடித் தோட்டங்களும் நகரப் பண்ணையும் அமைக்கப்படுவதன் மூலம் 2030ஆம் ஆண்டுவாக்கில் எரிசக்திப் பயனீட்டின் அளவு 15 விழுக்காடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!