தஞ்சோங் பகாரில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றில் தீ ஏற்பட்டது.
தீச்சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் தஞ்சோங் பகார் பிளாசாவில் உள்ள நான்காவது புளோக்கில் உள்ள வீட்டில் ஏற்பட்டது.
அதன் காரணமாக கிட்டத்தட்ட 50 பேர் அந்தக் கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீச்சம்பவம் குறித்து தங்களுக்கு பிற்பகல் 2:15 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.
தீ ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டில் ஏற்பட்டதாகவும் அது தண்ணீர் பீய்ச்சியால் அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.