ஜூலை முதல் இரண்டு வாரங்களில் அதிக மழை

ஜூலை முதல் இரண்டு வாரங்களில் அதிக மழை

1 mins read
93914ca5-6122-4cdc-aef5-b58641f880dc
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களின்போது பல பகுதிகளிலும் பெரும்பாலான நாள்களில் காலையில் பின்னேரத்திலும் பிற்பகலிலும் இடியுடன் சிறிது நேரம் மழை பெய்யும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல இடங்களில் பெரும்பாலான நாள்களில் காலையில் பின்நேரத்திலும் பிற்பகலிலும் இடியுடன் சிறிது நேரம் மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஒரு சில நாள்களில் இடியுடன் பரவலான மழை பெய்யும். அதிகாலை நேரத்திலும் காலை நேரத்திலும் காற்றும் வீசும்.

இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெய்யும் மொத்த மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சராசரி மழை அளவு 146.6 மி.மீ. ஆக இருந்து வந்துள்ளது.

அடுத்த இரண்டு வாரத்திற்கு அன்றாட கூடினபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதம் சராசரிக்கும் அதிகமாக மழை பெய்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்