டாக்சி ஓட்டுநரின் முகத்தில்குத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
b9e1499c-334d-4c01-9722-021adccae03f
டாக்சி ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் மின் மோட்டார் சைக்கிள் ஓட்டி திட்டியதாகவும் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டாக்சி ஓட்டுநரின் முகத்தில் குத்தி கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக மின் மோட்டார் சைக்கிள் ஓட்டியான டாய் யிவ் ஹுவாட், 51 மீது நேற்று குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

டாக்சி ஓட்டுநரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

2022 மே 29ஆம் தேதி எண் 330 பாலஸ்தியர் சாலையில் இரவு 7.20 மணியளவில் டாக்சியிலிருந்து இறங்கிய பயணி கதவைத் திறந்தார். அப்போது மின் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த டான், டாக்சி கதவு மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் டாக்சி ஓட்டுநரான சிம் அய்க் கின்னுக்கும் டானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டான் தகாக வார்த்தைகளைப் பிரயோகித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிம்மின் முகத்தில் அவர் குத்தியதாகவும் சொல்லப்பட்டது. இதில் சிம்மின் மூக்கு எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து டான் கைது செய்யப்பட்டார். வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகவும் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகவும் தகாத சொற்களால் திட்டியதாகவும் டான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

டான் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள விரும்புகிறார். தனது தரப்பில் வாதிட வழக்கறிஞரை நியமிக்க அவர் விரும்பவில்லை.

குறிப்புச் சொற்கள்