தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெய்லர் சுவிஃப்ட் கலைநிகழ்ச்சி: யுஓபி கடன் அட்டை விண்ணப்பம் அதிகரிப்பு

1 mins read
2695ec7b-ad46-47b4-9b57-f8846598cce4
சிங்கப்பூரில் கலைநிகழ்ச்சி படைக்க இருக்கும் அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் - படம்: ஏஎஃப்பி

பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் கலைநிகழ்ச்சி படைக்கிறார். அடுத்த ஆண்டு கலைநிகழ்ச்சி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டெய்லர் சுவிஃப்ட், தென்கிழக்காசிய நாடுகளைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் மட்டுமே மேடை ஏறுகிறார்.

இந்தக் கலைநிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை நடத்தப்படுவதற்கு முன்பு யுஓபி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

யுஓபி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்காக நுழைவுச்சீட்டு விற்பனை முன்கூட்டியே நடத்தப்படும்.

இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, யுஓபி கடன் அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த மாதம் வெகுவாக அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 21ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் யுஓபி கடன் அட்டைக்கான விண்ணப்பம் அன்றாட சராசரியாக 45 விழுக்காடு ஏற்றம் கண்டதாக யுஓபி வங்கி தெரிவித்தது.

அதே காலகட்டத்தில் யுஓபி பற்று அட்டைக்கான விண்ணப்பம் சிங்கப்பூரிலும் வியட்னாமிலும் ஏறத்தாழ 130 விழுக்காடு அதிகரித்தது.

யுஓபி கடன் அட்டை விண்ணப்பம் செய்தோரில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். புதிய கடன் அட்டைக்காக விண்ணப்பம் செய்தோரில் கிட்டத்தட்ட 52 விழுக்காட்டினர் பெண்கள்.

குறிப்புச் சொற்கள்