தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெரும்பாலான பிரிவுகளில் ‘சிஓஇ’ கட்டணம் குறைவு

1 mins read
717e5e50-02b9-40f9-bbc5-e769aaad569b
வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் குறைந்தன. - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

பெரும்பாலான வாகனப் பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் குறைந்துள்ளது.

சிறிய வாகனங்களுக்கான ஏ பிரிவில் மட்டும் கட்டணம் அதிகரித்தது. இப்பிரிவில் கட்டணம் 0.83 விழுக்காடு அதிகரித்து 97,000 வெள்ளியாகப் பதிவானது. சிறிய மின்சார வாகனங்களும் இப்பிரிவில் அடங்கும்.

1,600 சிசிக்கு அதிகமான கொள்ளளவைக் கொண்ட பெரிய வாகனங்களுக்கான பி பிரிவில் கட்டணம் 2.48 விழுக்காடு குறைந்து 118,002 வெள்ளியாகப் பதிவானது. 110 கிலோவாட்டைவிட அதிக சக்திகொண்ட பெரிய மின்சார வாகனங்களும் இப்பிரிவில் அடங்கும்.

பொதுப் பிரிவில் கட்டணம் 1.63 விழுக்காடு குறைந்து 121,000 வெள்ளியாகப் பதிவானது. வர்த்தக வாகனப் பிரிவில் கட்டணம் 1.1 விழுக்காடு குறைந்து 82,223 வெள்ளியாகப் பதிவானது.

மோட்டார்சைக்கிள்களுக்கான பிரிவில் கட்டணம் 5.78 விழுக்காடு சரிந்து 10,090 வெள்ளியில் முடிந்தது.

குறிப்புச் சொற்கள்